தருணம் மழை ஈயும் – Tharunam Mazhai Eeyum

Deal Score0
Deal Score0

தருணம் மழை ஈயும் – Tharunam Mazhai Eeyum

பல்லவி

தருணம் மழை ஈயும், நாதனே,
சருவேசா, அதி நேசா, பவ நாசா, ஈசா.

1 தருணம் அருள் ஈசனே, தவிக்கிறோம், மா ராஜனே,
கிரணம் ஒளிர் உல்லாசனே, கிலேசம் அகற்றும், நேசனே. -தரு

2. பூமி வறண்டு போனதே, புற்கள் வாடல் ஆனதே;
ஸ்வாமி, நன் மழை ஊற்றுமே, ‘தாபம் அனைத்தும் மாற்றுமே.-தரு

3.வெப்பம் மிகுந்த தையனே, வேளை உதவாய், துய்யனே,
எப்படியும் மழை பொழிந்தே இரக்கம் செய்வாய்; மெய்யனே-தரு

4.ஜீவன் யாவும் மாளுதே, தினமும் துயரம் நீளுதே,
தேவே, திருக்கண் பாருமே, செழிக்க நல் மழை தாருமே.-தரு

5.பஞ்சமே பறந்தோடவே, பணிந்துனைக் கொண்டாடவே;
கெஞ்சும் அடியர் கூடவே, கிருபை அருள் நீடவே.-தரு

6.அல்லும்பகலும் அழுகிறோம்; ஆற்றும் பரனே, தொழுகிறோம்
பொல்லார் எனவே விழுகிறோம்; பொழியும் மழையை, எழுகிறோம். தரு

Tharunam Mazhai Eeyum song lyrics in English

Tharunam Mazhai Eeyum Naathanae
Saruveasa Athi Neasa Pava Naasa Eesa

1.Tharunam Arul Eesanae Thavikkirom Maa Raajanae
Kiranam Olir Ullasanae Kileasam Agattrum Neasanae

2.Boomi Varandu Ponathae Purgal Vaadal Aanathae
Swami Nan Mazhai Oottrumae Thaabam Anaithum Maattrumae

3.Veppam Miguntha thaiyanae Vealai Uthavaai Thuiyanae
Eppadiyum Mazhi Polinthae Erakkam Seivaai Meiyanae

4.Jeevan Yaavum Maaluthae Thinamum Thuyaram Neeluthae
Devae Thirukkan Paarumae Sezhikka Nal Mazhai Thaarumae

5.Panjamae Paranthodavae Paninthunai Kondadavae
Kenjum Adiyar Koodavae Kirubai Arul Needavae

6.Allum Pagalum Alukirom Aattrum Paranae Thozhukirom
Pollaar Enavae Vilukirom Pozhiyum Mazhaiyai Ezhukirom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo