தினம் தினம் இயேசு நாயகனை – Dhinam Dhinam Yesu Naayaganai
தினம் தினம் இயேசு நாயகனை – Dhinam Dhinam Yesu Naayaganai
தினம் தினம் இயேசு நாயகனை
மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்!
ஆனந்தமாக என் நேசர் மார்பில்
அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்! – தினம்
1. கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரை பாட வைத்தார் – ஆனந்தமாக
2. வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார் – ஆனந்தமாக
3. தேவன் தன்னை விலையாய்த் தந்தே
பாவி என்னை மந்தை சேர்த்தார் – ஆனந்தமாக
4. மன்னவன் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான் – ஆனந்தமாக
5. அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன் – ஆனந்தமாக