திரும்பு மனந்திரும்பு

Deal Score0
Deal Score0

திரும்பு மனந்திரும்பு
பரலோகம் சமீபமே
விரும்பு இயேசுவை விரும்பு – அவர்
வருகை சமீபமே

அனுபல்லவி

காலங்கள் போனால் திரும்பாது
கிருபையின் நாட்களைத் தள்ளாதே (2) – திரும்பு

1. நாளை நாளை என்று நாளைக் கடத்தியே
நாசம் அடையாதே
மாய உலகத்தின் மயக்கும் பாதையில்
மனதைச் செலுத்தாலே – காலங்கள்

2. கர்த்தர் வருகையின் தாமதம் எண்ணியே
ஏளனம் செய்யாதே
கடின உள்ளத்தோர் எவரும் மாறிட
சந்தர்ப்பம் தருவாரே – காலங்கள்

3. கரங்களை நீட்டி அழைத்திடும் தேவன்
பாசத்தை உணராயோ?
பாவ வாழ்க்கையை உதறித்தள்ளியே
பரமனைச் சேராயோ? – காலங்கள்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo