
துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae
துதிகளின் நடுவினிலே – Thuthigalin Naduvinilae
துதிகளின் நடுவினிலே
தங்கிடும் எங்கள் தேவா
துதித்திடும் எங்கள் மீது
புது பெலன் ஊற்றும் தேவா
ஊற்றுமே ஊற்றுமே
புது பெலனை ஊற்றுமே
ஊற்றுமே ஊற்றுமே
புது கிருபை ஊற்றுமே
1.அன்பின் நிறைவே அன்பின் நிறைவே
பரலோக அன்பின் நிறைவே
நன்றியுடனே நல்உணர்வுடனே
நாதா உம்மைப் போற்றிடுவோம்
காலங்கள் மாறினாலும்
மாறாத அன்பதனின்
ஆழங்கள் அறிந்துணர்ந்தே ஆவியால் துதித்திடுவோம்
2.மன்னித்தவரே மாற்றியவரே மறுரூபமாக்குபவரே
எண்ணிலடங்கா துதி ஸ்தோத்திரங்களை
எந்நாளும் பாடிடுவேன்
மேகங்கள் மீதினிலே
வேகமாய் வந்திடுவீர்
உம்பாதம் சேர்ந்திடுவேன் ஓய்வின்றி துதித்திடுவேன்
Additional verse
3.பரிசுத்தரே பரிசுத்தரே பரலோகின் பரிசுத்தரே
பரவசமாய் மனநிறைவாய்
பரன் உம்மைப் போற்றிடுவோம்
உம்மைப் போல் எம்மையுமே மாற்றிடும் வல்லவரே
பரிசுத்த ஆவியிலே நிறைத்தெம்மை நடத்திடுமே