
துய்ய திருப் பாலனே – Thuiya Thirupaalanae
துய்ய திருப் பாலனே – Thuiya Thirupaalanae
1.துய்ய திருப் பாலனே, துன்ப வினை சூழ்ந்ததோ?-மகனே,
வையகத்தோ ரால் நமக்கு வந்த பலன் இதுதானோ?
2. விலகுங்கனி புசித்து வீழ்ந்த பாவிகளுக்காய்,-மகனே
வல்லமைத் தேவாதிதேவன் மனுடன் ஆகவேண்டாமோ?
3.கோபாக்கினை பெரிது, குற்றமில்லாத ஆமே;-மகனே
பாவத்தைச் சகித்துப் பாடுபட்டுத் தரிப்பாய்,
4.நரகத்தைக் காணாமல் நரர் குலம் வாழவே, -மகனே
தருணத்தில் சென்றுலகின் சாபத்தையே தவிர்ப்பாய்.
5.மானிடனாய்ப் பிறந்து வல்வினையைச் சுமந்து, மகனே
ஈனச் சிலுவை தனிலே அறையுண்டிறந்து,
6.மரணத்தை ஜெயங்கொண்டு, வலிய சர்ப்பத்தை வென்று, மகனே
நரகத்தைப் பூட்டி, வான நாட்டில் வருகுவாயே
Thuiya Thirupaalanae Lyrics in English
1.Thuiya Thirupaalanae Thunba Vinai Soolnthatho Maganae
Vaiyakathoraal Namakku Vantha Balan Ithuthano
2.Vilagunkani Pusithu Veelntha Paavikalukkaai Maganae
Vallamai Devaathidevan Manudan Aagavendamo
3.Kobakkinai Perithu Kuttramillaatha Aamae Maganae
Paavaththai Sakiththu Paadupattu Tharippaai
4.Naragaththai Kaanaamal Narar Kulam Vaazhavae Maganae
Tharunaththil Sentrulagin Sabaththaiyae Thavirppaai
5.Maanidanaai Piranthu Valvinaiyai Sumanthu Maganae
Eena Siluvai Thanilae Araiyundiranthu
6.Maranaththai Jeyankondu Valiya Sarpaththai Ventru Maganae
Narakaththai Pootti Vaan Naattil Varuguvayae