
தூதர்கள் துதிக்கும் – Thoothargal Thuthikkum Song lyrics
தூதர்கள் துதிக்கும் – Thoothargal Thuthikkum Song lyrics
தூதர்கள் துதிக்கும் தூயவா தாலேலோ
தூங்குவாய் துதியின் தொனியில் தாலேலோ
துங்கவனாய் தூயவனாய் மாந்தனாய் தோன்றினாய்
ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ
ஆரிரரோ ஆராரிரோ
ஆரிரரோ ஆராரிரோ
1. மன்னரின் மகுடம் சூடாமல்
மண்ணிலே வந்த ராஜா
மானிடர் பாவம் போக்கவே
மகிமையாய் வந்த ராஜா
2. கந்தை பொதிந்த கோலமாய்
காட்சி தந்தபோதும்
காணிக்கை செலுத்தி வாழ்த்தினர்
கீழ்தேச சாஸ்திரிகள்
3.பாவம் நிறைந்த உலகிலே
பரிசுத்த பாலனாய்
பரலோக வாழ்க்கை தோன்றவே
பாரில் வந்தவரே