
தூயாதி தூயவரே உமது புகழை -THOOYATHI THOOYAVARAE UMATHU
தூயாதி தூயவரே உமது புகழை -THOOYATHI THOOYAVARAE UMATHU
பல்லவி
தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்
அனுபல்லவி
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும் – தூயாதி
1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – பாரில்
2. மக்களின் நோய்களை நீக்கினவா
பாவியென் பாவநோய் நீக்கிடுமே – பாரில்
3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிடப் பெலன் தாருமே – பாரில்
4. தன் ஜீவன் எனக்காகத் தந்தவரே
என்னுள்ளம் பலியாக ஏற்றிடுமே! – பாரில்
5. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்குமோரிடம் தாருமே – பாரில்
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே
சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக;
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும்
ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர்
போதித்து புத்திசொல்லிக்கொண்டு,
உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
வார்த்தையினாலாவது கிரியையினாலாவது,
நீங்கள் எதைச் செய்தாலும்,
அதையெல்லாம் கர்த்தராகிய
இயேசுவின் நாமத்தினாலே செய்து,
அவர் முன்னிலையாகப் பிதாவாகிய
தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
16.Let the word of Christ dwell in you richly in all wisdom;
teaching and admonishing one another in psalms
and hymns and spiritual songs,
singing with grace in your hearts to the Lord.
And whatsoever ye do in word or deed,
do all in the name of the Lord Jesus,
giving thanks to God and the Father by him.
கொலோசெயர் :Colossians :3✝️