தேன் இனிமை யதிலும் – Thean Inimai Yathilum

Deal Score0
Deal Score0

தேன் இனிமை யதிலும் – Thean Inimai Yathilum

பல்லவி

தேன் இனிமை யதிலும் சத்ய வேதம்
திவ்யமான மதுரம்.

அனுபல்லவி

ஞானமது நிறையும் வேதமதில் எனக்கு,
நாதனே, அருள்ஆசை அனுதினம் ருசித்திட. – தேன்

சரணங்கள்

1.ஆரணம் அதி புனிதம் களங்கம் இல்லாத
சுகிர்த அமுதம்;
பூரணமாய் அதைத் தான்உட்கொண்டேவரில்,
பொன்னுல கதற்கேற்ற தன்மை உண்டாக்குமே. – தேன்

2.பாதைக்குரிய தீபம்; மெய் வேதம்
பற்றிடில் மிகு லாபம்;
வாதை செய்திடும் பல சோதனைகளும் எதிர்
வரில் அனைத்தும் வென்றிடத்தகும் படைக்கல மதே. – தேன்

3.விண்ண தழிந்தாலும், அதோ டிந்த
மேதினி ஒழிந்தாலும்,
திண்ண மதாய் என்றும் சிறந்திலகும் ஜீவ
திருமறை எனில் தங்கிப் பலன் தர அனுக்ரதி – தேன்

4.எத்திசையிலுமுள்ள நரர் யாவரும்
ஏகன் நின் அறிவு கொள்ள,
சுத்த சுவிசேஷம் துலங்கிப்ர காசிக்கத்
தூய நல் ஆவியை யாவர்க்கும் ஈந்தருள். – தேன்

Thean Inimai Yathilum song lyrics in English

Thean Inimai Yathilum Sathya Vedham
Dhivyamaana Mathuram

Gnanmathu Niraiyum Vedhamathil Enakku
Naathanae Arul Aasai Anuthinam Rusithida

1.Aaranam Athi Punitham Kalangam Illatha
Sugirtha Amutham
Pooranaami Athai Thaan Utkondaevaril
Ponnulaga Katharkeattra Thanmai Undakkumae

2.Paathaikuriya Deepam Mei Vedham
Pattridil Migu Laabam
Vaathai Seithidum Pala Sothanaikalum Ethir
Varil Anaithum Ventridathagum Padaikkalamathae

3.Vinna Thalinthaalum Athodintha
Meathini Olinthaalum
Thinna Mathaai Entraai Siranthilangum Jeeva
Thirumarai Enil Thangi Balan Thara Anukrathi

4.Eththisaiyilumulla Narar Yaavarum
Yeagan Nin Arivu Kolla
Suththa Suvishesam Thulangi Pirakasikka
Thooya Nal Aaviyai Yaavarkkum Eentharul

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo