தேவனைத் துதிப்பதும் – Devanai Thuthipathum

Deal Score+1
Deal Score+1

தேவனைத் துதிப்பதும் – Devanai Thuthipathum

பல்லவி

தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது

சரணங்கள்

1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் – தேவனை

2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் – தேவனை

3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் – தேவனை

4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் – தேவனை

5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் – தேவனை

நீதிமொழிகள்
2 அதிகாரம்
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
My son, if thou wilt receive my words, and hide my commandments with thee;
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
So that thou incline thine ear unto wisdom, and apply thine heart to understanding;
ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
Yea, if thou criest after knowledge, and liftest up thy voice for understanding;
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
If thou seekest her as silver, and searchest for her as for hid treasures;
அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
Then shalt thou understand the fear of the LORD, and find the knowledge of God.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo