தேவனைத் துதியுங்கள் அல்லேலூயா – Devanai Thuthiyunkal Allaeluyah

Deal Score0
Deal Score0

பல்லவி

தேவனைத் துதியுங்கள் – அல்லேலூயா
தேவனைத் துதியுங்கள் – ஆ-ஆ-ஆ-ஆ

சரணங்கள்

1. அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

2. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்
பார்த்துத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

3. அவர் வல்லமையுள்ள கிரியைகளுக்காக
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

4. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

5. எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடே – அல்லேலூயா – தேவனை

6. தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள்
யாழோடும் தீங்குழலோடும் – அல்லேலூயா – தேவனை

7. ஓசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

8. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்
அவரைத் துதியுங்கள் – அல்லேலூயா – தேவனை

9. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்
அல்லேலூயா ஆமென் – அல்லேலூயா – தேவனை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo