தேவன் இயேசு வருவார் நம்

Deal Score0
Deal Score0

தேவன் இயேசு வருவார் – நம்
தேவை யாவும் அறிவார்
காலம் அறிந்தே வருவார் – நம்மைக்
கண் போலக் காத்து அருள்வார்

சரணங்கள்

1. பிள்ளை அப்பமதைக் கேட்கும்போது
தந்தை கல்லினைத் தருவதுண்டோ?
முட்டைக்கு பதிலாய் பாம்பினையும்
மூடன் எவனும் தருவதுண்டோ?
விண்ணவராம் இயேசுவே நம் தந்தையல்லவா
வேண்டுவன தருவதும் மிக உறுதியல்லவா? – ஆகாகா – தேவன்

2. நீங்கள் உள்ளத்திலே கவலை கொள்ளாமல்
உங்கள் தேவனுக்குத் தெரிவியுங்கள்
கானக புஷ்பங்களைப் போஷிப்பவர்
கருத்துடன் நம்மையும் காத்திடுவார்
காலம் வரும் வாழ்வும் வரும் உறுதி கொள்ளுவோம்
கர்த்தரவர் பாதத்தில் காத்து இருப்போம் – ஆகாகா – தேவன்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo