தேவாதி தேவனை ஆராதிப்பேன் – Thevaathi Thevanai Aarathipaen
தேவாதி தேவனை ஆராதிப்பேன் – Thevaathi Thevanai Aarathipaen
தேவாதி தேவனை ஆராதிப்பேன்
என் இயேசு ராஜனை ஆராதிப்பேன்
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை காண்கின்ற தேவனவர்
ஆவியோடும் ஆராதிப்பேன்
உண்மையோடும் ஆராதிப்பேன்
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை காண்கின்ற தேவனவர்
1. எரிகோ மதிலே முன் நின்றாலும்
யோர்தான் நதியே குறுக்கிட்டாலும்
சிங்கத்தின் குகையில் நான் நின்றாலும்
அக்கினி ஜுவாலையில் வீழ்ந்திட்டாலும்
என்னை காக்கும் தேவனவர்
எனது நிழலாய் நிற்கின்றவர் – அவர் நல்லவர்…
2. உள்ளங்கையில் வரைந்தவராம் – என்னை
கண்ணின் மணிபோல் காப்பவராம்
பாவ சாபங்கள் நீக்கி என்னை
சொந்த பிள்ளையாய் மாற்றினாரே
வாக்கு மாறா தேவனவர்
வாழ்வை தந்த கர்த்தரவர் – அவர் நல்லவர்…
யஹோவா ராஃபா ஆராதிப்பேன்
யஹோவா ஷம்மா ஆராதிப்பேன்
யஹோவா ஈரே ஆராதிப்பேன்
யஹோவா நிசியே ஆராதிப்பேன்
எல்ஷடாய் உம்மை ஆராதிப்பேன்
எபினேசர் உம்மை ஆராதிப்பேன் – அவர் நல்லவர்