
தேவாவியே என் நெஞ்சை நீர் – Devaviyae En Nenjai Neer
தேவாவியே என் நெஞ்சை நீர் – Devaviyae En Nenjai Neer
1.தேவாவியே, என் நெஞ்சை நீர்
திருப்பிப் புதிதாக்குவீர்;
உம்மாலேயன்றி என்னிலே
ஓர் நன்மைதானும் இல்லையே.
2.உம்மால் கர்த்தாவை அறிவேன்
உம்மால் “பிதாவே” என்கிறேன்;
நீர் என்னைச் சத்தியத்திலே
முடியவும் தற்காப்பீரே.
3.என் பாதங்கள் யாவையும்
நீக்கி என் நெஞ்சைக் கழுவும்;
என் விசுவாசம் நேசமும்
மென்மேலும் வளரச் செய்யும்.
4.இவ்வருள் செய்யும் உமது
அளவிறந்த அன்புக்கு
இப்போதெப்போதும் உமக்கே
மா ஸ்தோத்திரம் உண்டாகவே.
Devaviyae En Nenjai Neer Lyrics in English
1.Devaviyae En Nenjai Neer
Tgiruppi Puthithakkuveer
Ummalaeyantri Ennilae
Oor Nanmaithaanum Illaiyae
2.Ummaal Karthavai Arivean
Ummaal Pithavae Enkirean
Neer Ennai Saththiyathilae
Mudiyavum Tharkaappeerae
3.En Paathangal Yaavaiyum
Neekki En Nenjai Kaluvum
En Visuvaasam Neasamum
MenMealum Valara Seiyum
4.Evvarul Seiyum Umathu
Alavirantha Anbukku
Ippotheppothum Umakkae
Maa Sthosthiram Undakavae
https://www.worldtamilchristians.com/blog/parisutha-paadhaiyil-christian-song-lyrics/