
தேவா பர தேவா – Deva Para Deva
தேவா பர தேவா – Deva Para Deva
பல்லவி
தேவா, பர தேவா, ஓ! யே
கோவா; எனைக் கா, வா
அனுபல்லவி
கா, வா, எனை, இக்காலையில் எழுந்து,
கண் பார்த்தென் மேல் கருணை புரிந்து,
சரணங்கள்
1 கடந்த இரா அந்தகாரம் பின் வாங்க
காலை ஒளி கண்ணுறக் காத்தெனை ஓங்க
உடந்தையாக என்னை உரித்துடன் தாங்க,
உன் அருள் புரி இடையூறுகள் நீங்க,
2. பாவம் பசாசுலகப் பாசம் விட்டோட
பரலோக வாழ்வினைப் பத்தியாய்த் தேட
பூவில் விசுவாசப் போராட்டம் ஆட,
புண்ணியன் உன்னையே போற்றி மன்றாட;
3 இந்த நாளில் அடியேன் எழுந்து பணிகள் ஆற்ற
ஏற்ற சவுக்கியம் பெலன் என்னிடம் தோற்ற,
வந்தருள் உன் திரு வசனமே சாற்ற
வரம் அளித்திட உன்னை வாழ்த்தியே போற்ற,
4. இந்நிலந் தன்னிலே, இறைவா நீ மாத்திரம்
ஏத்தித் தொழும் மகிமை ஏற்றிடப் பாத்திரம்;
உன் இடந்தான் நோக்கும் ஊன்றி என் ‘நேத்திரம்,
ஓதிடுவேன் என்றும் உனக்கே மா தோத்ரம்
Deva Para Deva Lyrics in English
Deva Para Deva Oh Yehova
Enai ka Vaa
Kaa Vaa Enai Ekkaalaiyil Elunthu
Kan Paarth En Mael Karunai Purinthu
1.Kadantha Era Anthakaaram Pin Vaanga
Kaalai Ozhi Kannura Kaathennai Oonga
Udanthaiyaaga Ennai Urithudan Thaanga
Un Arul Puri Idaivoorugal Neenga
2.Paavam Pasaasulaga Paasam Vittoda
Paraloga Vaazhvinai Bakthiyaai Theada
Poovil Visuvaasa Porattam Aada
Punniyan Unnaiyae Pottri Mantraada
3.Intha Naalil Adiyean Elunthu Panigal Aattra
Yeattra Savukkiyam Belan Ennidam Thottra
Vantharul Un Thiru Vasanamae Sattra
Varam Alithida Unnai Vaazththiyae Pottra
4.Innilam Thannilae Iraivaa Nee Maathiram
Yeaththi Thozhum Yeattrida Paathiram
Un Idanthaan Nokkum Oontri En Neathiram
Oothiduvean Entrum Unakkae Maa Thothram