தேவ சேயோ – Deva Seaiyo
தேவ சேயோ – Deva Seaiyo
தேவ சேயோ, தேவ சேயோ
ஜீவவான மன்னா,
மா திவ்விய கிருபா சன்னா
பாவிகளின் பிரசன்னா,
தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ,
ஆண்டருள் செயும் ஒசன்னா!
1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,
மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ
2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோ
நந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ,
3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,
மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ சேயோ,
4. மாட்டுக் கொட்டிலில் பிறந்த வல்ல தேவ சேயோ
மீட்டுக் கொண்டெமைப் புரந்த மேன்மை தேவ சேயோ,