தேவ பாலகன் பிறந்தாரே – Deva Balagan Piranthare
தேவ பாலகன் பிறந்தாரே – Deva Balagan Piranthare
தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவே
தேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே
கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே
கந்தை துணிகளிலே மன்னன் தவழுகின்றார்
மா தூய பாலனாக மீட்பின் நல் வேந்தனாக
விண்ணில் தூதர் பாட விண்ணவர் பிறந்தார்
உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம்
மாந்தர் மேல் பிரியம் உண்டாக பிறந்தார்