நடத்தும் இயேசுவே வழி நடத்தும்/Nadathum Yesuve Vali Nadathum/Rev.I.Christdhas..Hope Ag Church Pallikaranai

Deal Score+1
Deal Score+1

நடத்தும் இயேசுவே வழி நடத்தும்/Nadathum Yesuve Vali Nadathum/Rev.I.Christdhas..Hope Ag Church Pallikaranai

நடத்தும் இயேசுவே வழி நடத்தும்/Nadathum Yesuve Vali Nadathum

நடத்தும் இயேசுவே வழி நடத்தும்

என் கரம் பிடித்தென்றும் வழி நடத்தும்

1.பசுமை குன்றா புல்வெளி இடத்தும்

அமர்ந்த தண்ணீர் அண்டையில் நடத்தும்

மரண இருளின் பள்ளங்கள் நடுவே

கருணையாய் என்கரம் பிடித்தென்னை நடத்தும்

2.வறுமை துன்பங்கள் வாட்டிடும் போதும்

வெறுமை சோர்வும் மயக்கிடும் போதும்

சிறுமையால் மனம் சலித்திடும் போதும்

கிருபையே என்கரம் பிடித்தென்றும் நடத்தும்

3.சத்ரு என்னை சூழ்ந்திடும் போதும்

மித்ரு எனக்கெதிர் பேசிடும் போதும்

நிந்தனை பழிச்சொல் சுமத்திடும் போதும்

வந்திருதென்கரம் பிடித்தென்றும் நடத்தும்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Godwinraja
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo