நன்றிகெட்டவனாய் – NANDRIKETTAVANAI Lyrics
நன்றிகெட்டவனாய் இந்த உலகில் வாழ்கிறேன்
நன்றியின்னா என்வென்று உம்மையே கேட்கிறேன்
பத்தாயிரம் கடனை மன்னிக்கப்பெற்றேன் – 2 நான்
ஆயிரம் கொடுத்துவிட்டு கழுதை நெறிக்கிறேன்
எவ்வளவு ஆசீர்வாதம் வரவில்ல கேடு ஏதும்
மேன்மையில் வாழ்ந்து வந்தேன் நான்
கடன் உடன் ஏதுமில்லை
வியாதியில் படுக்கவில்லை
புத்தான்டை கடந்துவந்தேன் நான்
எல்லாமே உம்மாலதானே…
ஆனாலும் நன்றி இல்லையே
சென்ற ஒரு ஆண்டுக்கும் வந்த புது ஆண்டுக்கும்
எள்ளவும் மாற்றம் இல்லையே
கோயிலுக்கு சென்றுவிட்டேன் காணிக்கையை போட்டுவிட்டேன்
சகோதர அன்பு இல்லையே
உள்ளம் எல்லாம் கல்லும் முள்ளுதான்
வேண்டுமே நீர் மட்டும்தான்
என்ன எதிர் பார்க்கின்றீர்?
சொத்துபத்தா கேட்கின்றீர்
நெஞ்சத்தானே கெஞ்சி நிற்கிறீர்
செஞ்ச தப்பு போதுமுன்னு
தண்டனைய ஏத்துகிட்டு
பாவம் இனி செய்யாதே என்றீர்
அன்பான தெய்வம் நீதானே
ஆனாலும் நன்றியில்லையே
நன்றிகெட்டவனாய் இந்த உலகில் வாழ்கிறேன்
நன்றியின்னா என்வென்று உம்மையே கேட்கிறேன்
பத்தாயிரம் கடனை மன்னிக்கப்பெற்றேன் – 2 நான்
ஆயிரம் கொடுத்துவிட்டு கழுதை நெறிக்கிறேன்
நன்றிகெட்டவனாய் இந்த உலகில் வாழ்கிறேன்
நன்றியின்னா என்வென்று உம்மையே கேட்கிறேன்
இந்த நாள் என்று மாறுமோ?
மாற்றம் தான் என்று வருமோ?
நீர் வந்தால் எல்லாம் மாறுமே?
தேவனால் எல்லாம் கூடுமே?