நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka
நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka
நன்றி சொல்லாமல் இருக்க முடியுமா
நீர் செய்த நன்மைகளை மறக்க முடியுமா 2
நான் உன்னை மறந்தாலும்
நீ என்னை மறக்கவில்லை
உம்மை விட்டு விலகினாலும் என்னைவிட்டு விலகவில்லை -2
நன்றி பலியாக என்னையே தருகிறேன்
சுகந்தவாசனையாய் ஏற்றுக்கொள்ளும்
-நன்றி சொல்லாமல்
1.நல்ல மேய்ப்பராக என்னை நடத்துகிறீர்
பாதை மாறிடாமல் பாதுகாக்கின்றீர் -2
மரண இருள் என்னை சூழ்ந்திடும்
வேளையிலும்
உமது கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே -2
2. புல்லுள்ள இடங்களில் என்னை
நடத்துகிறீர்
அமர்ந்த தண்ணீரண்டை அழைத்து செல்கின்றேன் – 2
எதிரிகள் முன்பாக பந்தியை உருவாக்கி
பாத்திரம் நிரம்பி வழிய அபிஷேகம் செய்கின்றீர்-2