
நன்றி பலி செலுத்திடுவோம் – Nandri Pali Seluthiduvom
நன்றி பலி செலுத்திடுவோம் – Nandri Pali Seluthiduvom
Lyrics:
நன்றி பலி செலுத்திடுவோம்
இயேசு நல்லவர்
முழுமனதாய் துதித்திடுவோம்
கிருபை தந்தவர்
கர்த்தரின் வழியில் நாம் நடப்போம் நித்தம்
நமது கூடாரத்தில் கெம்பீர சத்தம்
தேவனுக்குப் பிரியமாய் நாம் நடந்தால்
நன்மையும் கிருபையும் தொடரும் பின்னால்
1. கர்த்தரின் வேதம் பாதைக்கு வெளிச்சம்
தினமும் தியானித்தால் பாக்கியமே
பாவத்தை வெறுத்து நீதிக்கு பிழைத்தால்
கிருபை பொழியும் அவர் கரமே
புதிய வாசலை திறந்திடுவார்
கேதுரு போல செழிக்க செய்வார்
2. துன்மார்க்கமாய் நடந்து கொள்ளாமல்
பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடுவோம்
கரைதிரை இல்லா வாழ்க்கை வாழ
தினமும் சிலுவையை சுமந்திடுவோம்
குறைவுகள் எல்லாம் நிறைவாக்குவார்
வறண்ட நிலத்தை செழிப்பாக்குவர்