நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த

Deal Score0
Deal Score0

நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் – இந்த
நானிலத்தில் வேறு தெய்வமில்லை – நம்

1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
பாக்கியமுள்ளது எனப்படுமாம் – நம்

2. பாவமறியாத பரிசுத்தராம் இயேசு
பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – நம்

3. பற்பல கிருபைகள் பகருகின்றார் – நாம்
கற்புடன் அவர் பணி செய்திடவே – நம்

4. கற்சிலை பேசுமோ வாய்திறந்து – நம்
கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் – நம்

5. மறப்பாளோ தாய் தன் பாலகனை – நான்
மறப்பதில்லை என்றும் அன்பு தெய்வம் – நம்

6. ஏறெடுக்கும் நம் தேவைகட்கு – அவர்
மாறாமல் பதில் தரும் மகிபனவர் – நம்

7. சகலமும் படைத்த சர்வாதிகாரி – இயேசு
சகலமும் ஜெயித்திட்ட சர்தாரி – நம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo