நம் தேவன் அன்புள்ளவர் – Nam Devan Anbulavar

Deal Score+1
Deal Score+1

நம் தேவன் அன்புள்ளவர் – Nam Devan Anbulavar

நம் தேவன் அன்புள்ளவர், நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர், நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே

1. நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ அந்த அன்பில் மகிழ்வோம்
அவரின் பாதம் பணிவோம் (2) – நம்

2. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே (2) – நம்

3. வானமீதில் இயேசு இறங்கி வருவார்
தேவதுதர் போல மகிமை அடைவோம்
ஆ எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே (2) – நம்

4. அல்லேலுயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே (2) – நம்

உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்;
நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும்,
தெற்கேயும் பரம்புவாய்;
உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும்
பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
And thy seed shall be as the dust of the earth,
and thou shalt spread abroad to the west,
and to the east, and to the north,
and to the south: and in thee and in thy
seed shall all the families of the earth be blessed.
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து,
இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்;
நான் உனக்குச் சொன்னதைச்
செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
And, behold, I am with thee,
and will keep thee in all places whither thou goest,
and will bring thee again into this land;
for I will not leave thee, until
I have done that which I have spoken to thee of.
ஆதியாகமம் : Genesis :28 ✝️

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo