நல்லவரே வல்லவரே – Nallavarae Vallavarae
நல்லவரே வல்லவரே – Nallavarae Vallavarae
நல்லவரே வல்லவரே
அற்புதரே அதிசயரே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை உயர்த்துவேன்
உம்மை வாழ்த்துவேன்
உம்மை வணங்குவேன்
என் ஏசுவே என் நேசரே
யோசபாத்தும் ஜனங்களும் துதித்த
வேளையில் ஜெயம் தந்தீர்
பவுலும் சீலாவும் துதிக்கையில்
சிறைக்கதவுகள் உடைந்ததே
என் ஏசுவே என் நேசரே
நீர் இன்றும் ஜீவிக்கின்றீர்
நீர் ஜெயத்தை தந்திடுவீர் – 2 – உம்மை ஆராதிப்பேன்
மரித்த லாசருவை உயிரோடு எழுப்பினீர்
என்னை நரகத்திலிருந்து தப்புவிக்க
நீர் மரித்து உயிர்த்திட்டீர்
என் ஏசுவே என் நேசரே
நீர் இன்றும் ஜீவிக்கின்றீர்
என்னை ஆவியால் உயிர்ப்பித்தீர் – உம்மை ஆராதிப்பேன்