நீங்காத பேரின்பமே நிலையற்ற Neengaatha Perinbame
நீங்காத பேரின்பமே நிலையற்ற வாழ்வினிலே
நிம்மதி தருபவரே நீரே என் இயேசு ராஜா
1. பாவியாய் அலைந்தேன் தேடியே வந்தீர்
துரோகியாய் திரிந்தேன் என்னை கண்டுபிடித்தீர்
பாசம் வைத்து என்னை இரட்சித்தீரே
உம் நேச அன்பால் என்னை மூடினீரே
2. உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன்
உருமாற்றம் அடைவேன் உம் ஆவியினால்
எனக்காக ஜீவனை தந்தீரேசுவே
அதை என்றும் என் வாழ்வில் மறப்பேனோ
3. பரலோக வாஞ்சை பரிசுத்தர் சிநேகம்
தந்தீரே உம் கிருபையினால்
நித்திய ஜீவனை (நான்) பெற்றிடவே
(உம்) நிலைவர ஆவியால் நிரப்பிடுமே