நீர் என்னை காண்கின்ற தேவன் – Neer ENNAI kaankintra Devan
நீர் என்னை காண்கின்ற தேவன்
நான் உம்மை நோக்கும் அடிமை
பெயரசபாவின் பாலையில்
அலைந்து திரிகின்ற வேளையில்
அன்பாய் என்னை அழைத்தீரே
என் வாழ்விலும் என் தாழ்விலும்
எல்லா வேளையிலும் ஆண்டவராம் நீரே
பூவில் வாழும் நாள்வரை
பூரண விசுவாசத்தை
தாரும் ஜெயமாய் விளங்கிட
என் தேவனே என் ராஜனே
மணவாளனே வாருமே ஆமென்