நேர் வழியாய் நடத்தி – NAER VAZHIYAI NADATHI LyRICS
நேர் வழியாய் நடத்தி – NAER VAZHIYAI NADATHI LyRICS
NAER VAZHIYAI NADATHI VANTHA DEVAN
நேர் வழியாய் நடத்தி வந்த தேவன்
என் பாதைகளை செவ்வைப்படுத்திய கர்த்தர்
கடந்ததை நினைத்து நான் பார்க்கையில்
உங்க அன்பு மட்டும் எனக்கு தெரியுதே
கடந்ததை நினைத்து நான் பார்க்கையில்
உங்க இரக்கம் மட்டும் எனக்கு புரியுதே
1. பெலவீன வேளைகள் வந்தும்
மரண பயம் சூழ்ந்து நின்ற போதும்
மறைத்தீரோ உம் முகத்தை மறைத்தீரோ
மறவாமல் என்னை நினைத்தீரே
2. மீறுதல்கள் நான் அறிந்த போதும்
கிருபை என்னை விட்டு விலகின போதும்
மறைத்தீரோ உம் முகத்தை மறைத்தீரோ
மறவாமல் என்னை நினைத்தீரே
3. எண்ணெயும் மாவும் குறைந்த போதும்
பெலவீன வார்த்தை வந்த போதும்
மறைத்தீரோ உம் முகத்தை மறைத்தீரோ
மறவாமல் என்னை நினைத்தீரே