பனித்துளி தூவிடும் இரவில்- Pani thuli thoovidum iravil
பனித்துளி தூவிடும் இரவில்
வான் கூரையையாய் கொண்ட தொழுவில்
தெய்வ சுதனாய் அன்னை மடியில்
தவழ்ந்தார் இயேசு பாலன்
மண்ணுலகை அவர் மீட்டிட
மாடடை குடிலில் பிறந்திட்டார்
மானிடர்கள் பாவம் போக்கிட
ஏழையின் கோலம் எடுத்திட்டார்
தேவலோகம் துறந்த இயேசு
கன்னியின் மைந்தனாகினார்
விண்ணொளி வானத்தில் தோன்றிட
தூதர்கள் நற்செய்தி உரைத்தனர்
மந்தையை காத்திட்ட மேய்ப்பர்கள்
அவர் முகம் காண விரைந்தனர்
பாலன் இயேசுவை கண்டு மகிழ்ந்து
வாழ்த்தி வணங்கி துதித்தனர்