
பாவத்திலே நான் பிறந்தேன் -Paavathilae Naan Piranthean
பாவத்திலே நான் பிறந்தேன் – Paavathilae Naan Piranthean song lyrics
பாவத்திலே நான் பிறந்தேன்
தேவனையே நான் மறந்தேன்
என்னமோ ஆகபோகிறேன் – என் வாழ்க்கை
இருளிலே மூழ்கி போனதே -(2)
அப்பன் சொத்தில் பங்கை
வாங்கி ஆட்டம் போட்டேனே
அப்போவெல்லாம் போட்ட ஆட்டம்
அளவும் இல்லையே
காசெல்லாம் குறைஞ்சி போச்சி
கவலைகள் கண்ணீராச்சி
காட்சிகள் மறஞ்சி போச்சி
கானல் நீருமாச்சி
உள்ளதெல்லாம் இழந்து போனதால்
என் உறவுகள் என்னை விட்டு விலகி போனதே – பாவத்திலே
கஷ்டங்களும் நஷ்டங்களும்
என் கழுத்தை நெறிக்குதே
பாவங்கள் கோரோனோவை போல்
பயமுறுத்திடுதே
தோல்விகளே தொடர்கதையாய்
தோள் கொடுக்க யாருமில்லை
பந்தியிலே எச்சில் இலையாய்
குப்ப தொட்டி நிலையுமானான்
எங்க நான் போக போகிறேன்
என் வாழ்க்கையை
தொலைக்க தான் போக போறேனோ – பாவத்திலே
காலமே வழி தெரியுது
மரணத்தின் கூர் விலகுது
ஏசப்பாவின் பிள்ளையானதால்
என் வாழ்க்கை
வெளிச்சத்தை போலானதே (2)