பாவியே நீ போகும் போது கூட – Paaviye Nee pogum Pothum Kooda
பாவியே நீ போகும் போது கூட – Paaviye Nee pogum Pothum Kooda
பல்லவி
பாவியே நீ போகும் போது கூட வருவதென்ன?
கூட வருவதென்ன? கொண்டு நீ வந்ததென்ன?
1. ஆடு மாடு நன்செய் புன்செய் வீடுவாசல் தான் வருமோ?
பாடுபட்டு லாயக்காய் தேடும் பணம் வருமோ? – பாவி
2. உத்தியோக மதிப்புகளும் பி.ஏ., எம்.ஏ. பட்டங்களும்
மெத்தவே அரையில் கட்டும் ஆடைகளும் வருமோ? – பாவி
3. மாயை மாயை மாயை என்று சொல்லுகிறான் பிரசங்கி
ஞாயமாய்த் தீர்ப்பு செய்தார் ஞானி சாலமோன் தானே – பாவி
4. தேடு நீ கண்டடைவாய் தட்டுத் திறப்பேனென்றார்
கேளு கொடுப்பேனென்றார் கேட்டவரம் தருவார் – பாவி