பாவி யேசுனைத் தானே தேடி – Paavi Yesuthanai Thaane thedi
பாவி யேசுனைத் தானே தேடி – Paavi Yesuthanai Thaane thedi
பல்லவி
பாவி யேசுனைத் தானே தேடித் துயர் மேவினார்
இதைத் தியானியே
சரணங்கள்
1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன்
பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன்
மானிடனாக அவதரித்த தெய்வீகன்
வல்ல பேயை ஜெயித்த மாமனுவேலன். – பாவி
2. தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய
தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய
தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக்குட்டி
துன்பக் கடலில் அமிழ்ந்தாற்றுதல் செய்ய. – பாவி
3. இந்தப் பாத்திரம் என்னை விட்டகலாதோ?
இல்லையானால் உமது இஷ்டமதென்றே
சிந்தை துயரடையச் செப்பினார், அன்றோ
சுவாமி உனக்காய் பிணைப்பட்டதால், அந்தோ! – பாவி
4. கெத்சமனேயில் ஏசு பட்டதை நினையே
கேவலமான உன்தன் பாவத்தை மறவே
ஆத்தும நேசர் பதம் ஆவலாய் பணியே
அன்பின் கரத்தாலுனை அணைப்பார் நிச்சயமே. – பாவி