பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku
பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா
உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா
சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே
பாவியை மீட்க வந்த பாலன் அவரே
உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார்
மகிமை நிறைந்த தேவன் அவர் இயேசு பாலனே
ரட்சிப்பை கொடுக்கும் வள்ளல் இயேசு பாலனே
அந்த தேவன் இயேசு புல்லணையில் பிறந்தார்
சாஸ்திரிகள் தேடி வந்த தேவன் அவரே
ஆட்டிடையர் போற்றி நின்ற மீட்பர் அவரே
அந்த தேவன் இயேசுவை வாழ்த்தி பாடுவோம்