
புது கிருபையைத் தாரும் – Pudhu kirubaiyai Thaarum
புது கிருபையைத் தாரும் – Pudhu kirubaiyai Thaarum
புது கிருபையைத் தாரும்
என் தேவா (2)
எனைத் தாழ்த்தியே
உம் சமூகம் வந்தேன்
எனதாவையும்
இன்று அர்ப்பணித்தேன்
இக்கட்டின் வேளையில்
எனைத் தாங்கும் கிருபை
காரிருள் பாதையில்
எனைக் காக்கும் கிருபை
கண்ணீரில் கவலையினில்
எனைத் தேற்றும் கிருபை
கலங்கிடும் வேளையினில்
மாறா உம் கிருபை
தனிமையின் நேரத்தில்
உடன்வரும் கிருபை
பெலனற்ற வேளையில்
சுமந்திடும் கிருபை
நான் என்றும் நம்பிடும்
தேவா உம் கிருபை
இன்றும் நான் கேட்கிறேன்
உமதன்பின் கிருபை