புல்லுள்ள இடங்களில் – Pullulla Idangalail

Deal Score0
Deal Score0

புல்லுள்ள இடங்களில் – Pullulla Idangalail

புல்லுள்ள இடங்களில்
மேய்த்திடும் தேவா
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்
மரணத்தின் பள்ளத்தில் நான் நடந்தாலும்
கிருபையின் கோலினால் தாங்கிடுவீர்

Chorus
பெயர் சொல்லியே என்னை அழைத்தீரே
பெயர் சொல்லியே என்னை அழைத்தீரே

கருவிலே என்னைக் கண்டவர் நீரே
நன்மைகள் எனக்காய் செய்பவரே
வழுவாமல் என்னைக் காத்தவர் நீரே
இனிமேலும் என்னைக் காத்திடுவீர் – பெயர்

எதற்கும் உதவாத என்னை அழைத்தீர்
எட்டாத உயரமாய் தூக்கியே விட்டீர்
கன்மலையின் மறைவுக்குள் நிறுத்தி
கரங்களின் நிழலினால் மூடிவிட்டீர் – பெயர்

கரத்தினால் நீர் என்னை தூக்கியணத்தீர்
உந்தனின் அன்பின் அடையாளமாய்
உந்தனின் சாட்சியாய் என்னையே நிறுத்தி
ஏற்ற காலத்தில் நிறைவேற்றினீர் – பெயர்

Ennai Thangidum Devan | Dawn Ragavan | Tamil Christian Song | #tamilchristiansongs

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo