
பூவுலகின் பாவங்கள் போக்கிடவே -Poovulagain paavangal pokkidave
பூவுலகின் பாவங்கள் போக்கிடவே
விண்ணின் வேந்தன் மண்ணில் இன்று பிறந்தாரே
நம் ஒப்பில்லாத தேவ மைந்தன்
தாழ்மை ரூபம் எடுத்தாரே
ஏழை கோலமாய் பிறந்தாரே
நாமும் வாழ்த்தி பாடுவோம்
கொண்டாடி மகிழ்வோம்
சாஸ்டாங்கமாய் அவர்
பாதம் பணிவோம்
நற்செய்தியை கேட்ட மேய்ப்பர்; ரட்சகரை
-காண நாடி
நட்சத்திரத்தை பின்தொடர; சாஸ்திரிகளும் -விரைந்தோடி
முன்னணை மீது பாலனை கண்டு; மகிழ்ந்தனரே -வியந்தனரே
பொன் வெள்ளைப்போளம்
– தூபவர்க்கம் ;படைத்தனரே பணிந்தனரே
தேவன் நம்மில் வைத்த ; அன்பை வெளிப்படுத்த
நம் பாவம் நீக்கி ரட்சிக்க ; தம் சொந்த குமாரனை -நமக்கு ஈந்தார்
அவர் போல அன்பை வெளிப்படுத்தும் ; நற்கிரியை -செய்திடுவோம்
இயேசுவின் நாமம் உயர்த்திடும் ; சாட்சிகளாய் -வாழ்ந்திடுவோம்.