பெந்தேகொஸ்தென்னும் நாளிலே -penthecosthennum naalilae
பெந்தேகொஸ்தென்னும் நாளிலே -penthecosthennum naalilae
பெந்தேகொஸ்தென்னும் நாளிலே
சீஷர் ஒன்று சேர்ந்தனரே
வானம் திறந்து வல்லமை காற்று
யாவர் மேலும் வீசியதே
ஆவியானவர் அனைவர் மேலும்
அக்கினி நாவாய் அமர்ந்தாரே
பல பல பல பல பாஷைகள் பேசி
கர்த்தரை துதித்து மகிழ்ந்தனரே
பல பல பல பல தேசத்து மக்கள்
ஒன்று கூடி வியந்தனரே
1. ஜோயல் கூறிய இறைவாக்கு
பீட்டர் வாயால் தொனிக்கிறதே
மனிதர் அனைவரும் தொழுதனரே
மனம் திரும்பி மகிழ்ந்தனரே
2. இயேசு சிந்திய சிலுவை இரத்தம்
மனிதனின் பாவத்தை கழுவியதே
மறுபடி பிறந்த மனிதரெல்லாம்
மகிமையின் ஆவியில் நிறைந்தனரே
3. கர்த்தர் கொடுத்த கட்டளையை
கடைபிடித்து ஜெபித்தனரே
எங்கும் தொழுது மகிழ்ந்தனரே
ஏராளம் அற்புதம் தொடர்கிறதே
4. சபைகள் நிரம்பி வழிகிறதே
சாத்தான் கோட்டை தகர்கிறதே
சமாதானம் தழைக்கிறதே
தேசம் சேமம் அடைகிறதே
5. மாம்சமான யாவர் மேலும்
உம் ஆவியை ஊற்றிடுமே
தரிசனங்கள் பார்க்கனுமே
உம் சித்தம் செய்யனுமே