பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS
பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS
பொங்குதே ஆனந்தம் – புவி
எங்குமே இல்லா பேரானந்தம்
வையகம் தந்திட இன்பம்
இயேசு ஐயனளித்த ஆனந்தம்
பொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்
மெய்யனகற்றினார் என் பாவ தோஷம்
…பொங்குதே ஆனந்தம்
பரலோகமேன்மை துறந்து
நரலோக மானிடனாய் பிறந்து
எவர்க்குமே கிடையாத சிலாக்கியம்
பரமனை நம்புவோர்க்களித்தார் நல்பாக்கியம்
…பொங்குதே ஆனந்தம்
குருசினில் சிந்தின இரத்தம்
குரு இயேசுவில் உண்டான சுத்தம்
கல்வாரியில் தெய்வ மகத்துவம் நேசம்
கல்லான இதயமும் கனிந்திடும் பாசம்
…பொங்குதே ஆனந்தம்
பாவ பரிகார நாமம்
கொடும் ரோகப் பரிகார நாமம்
சர்வ லோகத்திலும் மேலான நாமம்
சர்வ ஜனத்திற்கும் இரட்சண்ய நாம்ம்
…பொங்குதே ஆனந்தம்