
பொன்னான முகத்தை நான் – Ponnana Mugathai Naan
பொன்னான முகத்தை நான் – Ponnana Mugathai Naan
பொன்னான முகத்தை நான் பார்த்து – உம்
பொற்பாதம் பணிந்து முத்தம் செய்கின்றேன்
1. காயப்பட்ட தலையை நான் பார்த்து
கண்ணீரோடு முத்தம் செய்கின்றேன்
2. சிலுவை சுமந்த தோளைப் பார்த்து
சிந்திய இரத்தத்தை முத்தம் செய்கின்றேன்
3. காயப்பட்ட கரத்தை நான் பார்த்து
கட்டித்தழுவி முத்தம் செய்கின்றேன
4. வாரினால் அடிப்பட்ட உடலைப்பார்த்து
வாழ்நாளெல்லாம் முத்தம் செய்கின்றேன்
5. ஈட்டியால் குத்தப்பட்ட மார்பைப்பார்த்து
பணிந்து குனிந்து முத்தம் செய்கின்றேன
6. காயப்பட்ட கால்களை நான் பார்த்து
கண்ணீரோடு முத்தம் செய்கின்றேன்