
போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம்
போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம்
ஏற்றுவோம் பரன் நாம மதை
பாடுவோம் புகழ் பாடுவோம் தினம்
நாடுவோம் அவர் பாதமதை
1. நம்மைப் படைத்து இந்நாள் வரையும்
நம் குறை தீர்த்து நம்மோடிருந்து
நன்மைகள் தீமைகள் எதுவரினும்
நல்வழி நடத்திய நாயகன் ஏசுவை
2. சோதனை வந்திடும் நேரத்தில்
வேதனை நிந்தனை சூழ்ந்திடினும்
நாதனே என்று நாம் நோக்குகையில்
ஆதரவாய் வந்த ஆண்டவன் ஏசுவை
3. உற்றார் உறவினர் கைவிட்டாலும்
பெற்றவர் பிள்ளையை மறந்திட்டாலும்
சற்றுமே நான் மறவேன் எனவே
பற்றுடன் அணைத்திடும் பார்த்திபன் ஏசுவை