மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics
Lyrics
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2)
எந்தனின் துரோகங்கள் தேசத்தின் வாதைகளோ
எந்தனின் பாவங்கள் மரணத்தின் ஓலங்களோ(2)
மனமிரங்கும் தேவா மனமிரங்கும்
என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2)
பாவி என்று என்னை அறிந்திருந்தும் துரோகி
என்று என்னை தெரிந்திருந்தும்
உம் இரத்தத்தால் என்னை மீட்டெடுத்தீர்
புத்திர சுவிகாரத்தை எனக்குத் தந்தீர்
மீண்டுமாய் பாவத்தில் விழுந்தேனோ
தேசத்தின் வாதைக்கு காரணம் ஆனேனோ-2
உம் நாமம் தரித்த நான் என் தலையை தாழ்த்தி
பொல்லாததை மறந்து விழுந்தேன் உம் பாதத்தில்-2
பரலோக தேவனே மன்னியுமே
தேசத்தில் ஷேமத்தை தந்திடுமே-2
மன்னியும் நீர் மன்னியும் என் பாவத்தை நீர் மன்னியும்
தந்திடும் நீர் தந்திடும் என் தேசத்தில் ஷேமம் தந்திடும்- (2)
தலை தனை தாழ்த்தி வணங்குகிறேன்
பரலோக தேவனே கேட்டிடுமே(2)
Manam Irangum Deva
Manam Irangum En – Desathin Meedhu Manam Irangum – (2)
Yendhanin Dhrogagal Desathin Vaadhaigalo
Yendhanin Paavangal Maranathin Olangalo – (2)
Manam Irangum Deva
Manam Irangum En- Desathin Meedhu Manam Irangum
Paavi Yendru Ennai Arinthirundhum
Dhrogi Yendru Ennai Therinthirundhum
Um Rathathal Ennai Meetedutheer
Puthira Suvigarathai Enaku Thandeer
Meendumai Paavathil Vizhuntheno
Desathin Vaadhaiku Kaaranam Aaneno – (2)
Manam Irangum Deva
Manam Irangum En- Desathin Meedhu Manam Irangum
Um Naamam Tharithu Naan En Thalaiai Thazhthi
Pollathadhai Marandhu Vizhunthen Um Paadhathil – (2)
Paraloga Devane Manniumey
Desathil Shemathai Thandidume – (2)
Manam Irangum Deva
Manam Irangum
En- Desathin Meedhu Manam Irangum
Mannium Neer Mannium
En Paavathai Neer Mannium
Thandhidum Neer Thandhidum
En Desathil Shemam Thandhidum – (2 )
Thalaithanai Thazhthi Vanakugiren
Paraloga Devane Ketidumey – (2)