
மனம் வருந்தி மனம் – Manam Varunthi Manam
மனம் வருந்தி மனம் – Manam Varunthi Manam
ஆ… ஆ… ஆ… ஆ… (2)
மனம் வருந்தி மனம் திரும்பு
மன்னிப்பு அருளுவேன் – என்
மன்னிப்பை ஏற்று மாண்புடன் வாழ
மனம் திரும்புவாய் (2)
ஆ… ஆ… ஆ… ஆ… (2)
விபூதி தடவி விருந்தைத் தவிர்க்க
விருப்பம் கொள்ளலாம்
விண்ணக வாழ்வின் இன்பங்கள் காண
இன்றே துவங்கலாம் (2)
ஆ… ஆ… ஆ… ஆ… (2)
இரக்கம் நிறைந்த இறைவன் உனக்காய்
இறந்தார் உணருவாய்
இரக்கம் காட்டி இனிதாய் வாழ
இறையாய் மாறுவாய் (2)
ஆ… ஆ… ஆ… ஆ… (2)
மனித வாழ்வை மாற்றும் சிலுவை
மறுக்க முடியுமா?
மனிதனாக தன்னைத் தந்தார்
மறக்க முடியுமா? (2)
ஆ… ஆ… ஆ… ஆ… (2)
வாழ்வில் துன்பம் வாட்டி வதைக்கும்
வருந்தி அழுவதேன்
வாழ்வின் சுமையை சிலுவை நாதர்
சுமந்து தீர்த்தாரே (2)
ஆ… ஆ… ஆ… ஆ… (2)