மனிதர்கள் என்னை – Manithargal Ennai
மனிதர்கள் என்னை – Manithargal Ennai
மனிதர்கள் மனிதர்கள்
என்னை உயிரோடு விழுங்கிருப்பார்
சூழ்நிலை பாரங்கள்
மரித்து நான் போயிருப்பேன்
நன்றி கெட்ட மனிதன் நான்
நன்மை ஏதும் இல்லையே
ஆனாலும் நேசித்தீரே
நான் போனாலும் தேடி வந்தீர்-2-மனிதர்கள்
1.எத்தனை துரோகம் வலிகள் பழிகள்
என்றோ நானோ அழிந்திருப்பேன்
உந்தனின் தியாக அன்பினால் நானும்
இன்னும் கூட வாழ்கிறேன்
நம்பி கொடுத்த உன்னத ஊழியம்
தகுதியாக மாற்றினதே
இறுதி மூச்சு உள்ள வரையும்
உம்மை நம்பி வாழ்ந்திடுவேன்-நன்றி கெட்ட
2.நண்பர்கள் என்னை தூற்றிய போதும்
உறவுகள் என்னை மறந்த போதும்
இயேசுவே நீரும் விட்டுப்போனால்
வாழ்கிறது இனியும் அர்த்தம் இல்லை
தனிமையில் வலிகள் மிகவும் கொடுமை
என்னை நினைக்க யாரும் இல்லை
தேவைகள் அனைத்தும் நீர்தான் என்றால்
உலகை நானும் மறக்கிறேன்-நன்றி கெட்ட