மன்னன் இயேசு வருகின்றார் – Mannan Yesu Varukintraar
மன்னன் இயேசு வருகின்றார் – Mannan Yesu Varukintraar
மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தப்படு
அல்லேலூயா ஆனந்தமே
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு (2)
1. மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப் பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலி புஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையானவர்
2. பொற்தள வீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இள நீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப் போற்றுதே
3. வெண் குதிரை மேல் உலாவ வருகின்றார்
வெண் கிரீடமும் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன்சிரிக்குதே
நட்சத்திரங்கள் கை கொட்டிப் பாடுதே