மறவாமல் உம்மை என்றும் – Maravamal Ummai Entrum
மறவாமல் உம்மை என்றும் – Maravamal Ummai Entrum
மறவாமல் உம்மை என்றும் நான் பாடுவேன்
உம் தயவாலே இன்று நான் உயிர் வாழ்கிறேன் -(2)
நீர் எந்தன் தந்தை
நான் உந்தன் மந்தை -(2)
நிந்தைகள் நீக்கி என் சிந்தை வாரும் -(2)
மறவாமல் உம்மை என்றும் நான் பாடுவேன்
உம் தயவாலே இன்று நான் உயிர் வாழ்கிறேன் -(1)
1) புரையோடி போன என் புதிரான வாழ்க்கை
உம் கரை நீக்கும் உதிரத்தால் உரம் ஆனதே -(2)
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தீர்
பட்சமான பாதுகாப்பு தந்தீர் -(1)
வேடிக்கையான என் வாடிக்கை வாழ்க்கையை
வாழ்வித்த தெய்வமே நமஸ்கரிப்பேன் -(2)
இரட்சிப்பின் பாத்திர ஊர்வலம் வருவேன்
இயேசுவே உம்மை தொழுவேன் -(2)
மறவாமல் உம்மை என்றும் நான் பாடுவேன்
உம் தயவாலே இன்று நான் உயிர் வாழ்கிறேன் -(1)
2) எதிர் காற்று எதிர் சேனை எதிர் வந்தாலும்
நான் எதிர் பார்க்கும் முடிவினை தருபவரே -(2)
தேவைகள் பாரங்கள் தொடர்ந்திடினும்
என் தேவையெல்லாம் உந்தன் கிருபை அல்லோ -(1)
நீசனாம் என்னையே நேசித்த தெய்வமே
வாசிக்கும் நிருபமாய் மாற்றிடுமே -(2)
இரட்சிப்பின் பாத்திர ஊர்வலம் வருவேன்
இயேசுவே உம்மை தொழுவேன் -(2)
மறவாமல்