மலரிதழ் மேலே பனித்துளி – Malarithal Maele Panithuli
மலரிதழ் மேலே பனித்துளி – Malarithal Maele Panithuli
மலர் இதழ் மேலே பனித்துளி போல
ஒரு துளி அன்பு யார் தருவார் என்று
ஏங்குதே என் மனம் இன்று -ஏசையா -2
குலக்கொடியாய் நல்ல கனிதரவே
கனிச்செடியாய் உம்மில் இணைத்திருந்தீர் -2
கனியற்ற விஷ கொடியாய் கருக்குள்ள முள்ளாகி
உறுத்திய என்மீது உம் அன்பை பொழிந்தது என்ன -2
மலர் இதழ் மேலே
வளம் தரும் வாழ்வினை கனவு கண்டேன் வறண்ட வனாந்திரம் வாய்த்தது என்ன குனங்கெட்ட மாந்தர்களின் இடமற்ற வார்த்தைகளால் மனம் தரும் மலர் கூட முள்ளாகி போவதென்ன
மலர் இதழ் மேலே
வருகையின் நாளில் மகிழ் உடனே
முகமுகமாய் உம்மை தரிசிக்கவே -2
கிருபையின் கரங்களுக்குள் அணு தினம் நடந்திடுவேன்
திரு அருள் தரும் தேவன் திருப்பாதம் பணிந்திடுவேன்-2
மலர் இதழ் மேலே