
மலைமேல் ஏறுவோம் – Malaimel Yeruvom
மலைமேல் ஏறுவோம்
மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம்
அவர் பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
1. தேவனின் வீடு பாழாய்க் கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா – 2
வாழ்வது நியாயமா
நாடெங்கும் சென்றிடுவோம்
2.திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன்
வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் – 2
வீணாய்ப் போவதேன்
நாடெங்கும் சென்றிடுவோம்
3.மனம் தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயம் வேண்டாம்
பயமே வேண்டாம்
நாடெங்கும் சென்றிடுவோம்
4.தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே
அசட்டை பண்ணாதே
நாடெங்கும் சென்றிடுவோம்
5.ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார்
மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்
மறுரூபமாக்கிடுவார்
மலைமேல் ஏறுவோம்