
மாம்சம் எல்லாம் மறைய – Mamsam Ellaam Maraiya Lyrics
மாம்சம் எல்லாம் மறைய – Mamsam Ellaam Maraiya Lyrics
மாம்சம் எல்லாம் மறைய வேண்டுமே
என்னில் கிறிஸ்து வெளிப்பட வேண்டும்
ஆவியான என் தெய்வமே
என்னை முழுவதுமாய் ஆளுகைசெய்யும்-2.(மாம்சம்)
1)கிறிஸ்துவை உடைய நான்
மாம்சத்தின் இச்சைகளை
சிலுவையிலே அறைந்திருக்கணும் -2
பாவத்திற்கு மரித்திருக்கணும்
நான் ஆவியிலே பிழைத்திருக்கணும்-2 (மாம்சம்)
2)இயேசுவின் கிருபையால்
நீதிமான் ஆக்கப்பட்டேன்
கிருபை என்னை நடத்துகின்றதே -2
பாவம் என்னை ஜெயிப்பதில்லையே
எனக்குள் ஆவியானவர் -2 (மாம்சம்)
3)பாடுகள் இழப்புகளோ மரணமோ ஜீவனோ
கிறிஸ்துவின் அன்பைவிட்டு
பிரிக்க முடியுமோ -2
இயேசு என்னில் அன்பு வைத்ததால்
முற்றிலும் ஜெயம் பெறுவேனே-2 (மாம்சம்)