மோட்சப் பேரின்பப் பாக்கியங்கள் – Motcha Pearinba Baakkiyangal
மோட்சப் பேரின்பப் பாக்கியங்கள் – Motcha Pearinba Baakkiyangal
பல்லவி
மோட்சப் பேரின்பப் பாக்கியங்கள் அறிவுக்கெட்டா
ஆச்சரியமாம் யோக்கியங்கள்.
அனுபல்லவி
காட்சி வளர் கடவுள் மாட்சிமையின் பிரதாபம்
காண அமரர் கண்கள் நாணும்; அதுவோ வேணும் – மோட்ச
சரணங்கள்
1.கண்களுக் கடங்கா நிதியும், பளிங்கைப் போல
கலந்து பாய்கின்ற நதியும்,
விண்ணவர்கள் கெம்பீரம், வெற்றியின் ஆரவாரம்
அண்ணல் கிறிஸ்து வீரர் ஆர் உரைப்பார் இந்நேரம்? – மோட்ச
2.நித்திய சங்கீர்த்தனங்களும், சீயோனுக்கும்
நிமலர்க்கும் மங்களங்களும்
சுத்தப் பளிங்கு மேடை, ரத்ன கசித ஆடை,
சுக பரிமள வாடை, சுதந்திரர் ஆவதோடே – மோட்ச
3.அறிவைக் கடந்த சுகங்கள்-உட்டணம் வெயில்
அணுவும் இல்லாத ‘நிகங்கள்,
செறியும் சுத்த சுகங்கள் திவ்ய மகாப் ‘பதங்கள்,
பரவு பேரின்பங்கள், பதியை நோக்குவோம் எங்கள் – மோட்ச
4.பயங்கள் திகில்கள் ஏது? பரிசுத்தர்கள்
பாடி மகிழும் போது,
ஜெயம்! ஜெயம்! என்று காத்ரத் திரித்துவத்துக்கு மாத்திரம்
மய நசரேயர் கோத்திரம் மகிழ்ந்து சொல்வோமே தோத்திரம் – மோட்ச
Motcha Pearinba Baakkiyangal song lyrics in english
Motcha Pearinba Baakkiyangal Arivuketta
Aachariyamaam Yikkiyangal
Kaatchi Valar Kadavul Maatchimaiyin Pirathabam
Kaana Amarar Kangal Naanum Athuvo Veanum
1.Kankalu Adanga Nathiyum Palingaipola
Kalanthu Paaikintra Nathiyum
Vinnavargal Kembeeram Vettriyin Aaravaaram
Annal Kiristhu Veerar Aar Uraippaar Innearam
2.Nithtiya Sangeerthanangalum Seeyonukkum
Nimalarkkum Mangalangalum
Suththa Palingu Meadai Rathna Kasitha Aadai
Suga Parimala Vaadai Suthanthirar Aavathodae
3.Arivai Kadantha Sugangal Uttanam Veayil
Anuvum illatha Nigangal
Seariyum Suththa Sugangal Dhivya Maga Pathangal
Paravu Pearinbangal Pathiyai Nokkuvom Engal
4.Bayngal Thigilgal Yeathu Parisuththargal
Paadi Magilum Pothu
Jeyam Jeyam Entru Kaathra Thirithivaththukku Maathiram
Maya Nasareayar Kothiram Magilnthu Solluvomae Thoththiram