யாருண்டு இயேசையா – Yarundu Yeasaiah
யாருண்டு இயேசைய்யா இவ்வுலகில்
உம்மைப் போல என்னை நேசித்திட (2)
என்மீது அன்பு காட்டிட யாருமில்லை யாருமில்லை
ஆதரித்து எனை அணைக்க இங்கு யாருமில்லை
யாருமில்லை
உண்மையாய் நேசிப்போர் எவருமியில்லை
எவருமில்லை
ஏன் என்று எனைக் கேட்க நாதியில்லை
நாதியில்லை. -யாருண்டு
1).நான் போகும் பாதை காரிருளாக காட்சியளித்தது ஒவ்வொரு நாளும் (2)
காரிருள் நீக்கி பயமதை போக்கி
கரம் பற்றி நடத்திட யாருண்டு ( 2 )
என்மீது அன்பு காட்டிட யாருமில்லை யாருமில்லை
ஆதரித்து எனை அணைக்க இங்கு யாருமில்லை
யாருமில்லை
உண்மையாய் நேசிப்போர் எவருமியில்லை
எவருமில்லை
ஏன் என்று எனைக் கேட்க நாதியில்லை
நாதியில்லை.
2).உள்ளம் உடைந்து இதயம் நொறுங்கி
கலங்கி நானும் கதறிடும் நேரம் ( 2 )
காயங்கள் ஆற்றி கனிவுடன் தேற்றி
ஆறுதல் அளித்திட யாருண்டு (2)
என்மீது அன்பு காட்டிட யாருமில்லை யாருமில்லை
ஆதரித்து எனை அணைக்க இங்கு யாருமில்லை
யாருமில்லை
உண்மையாய் நேசிப்போர் எவருமியில்லை
எவருமில்லை
ஏன் என்று எனைக் கேட்க நாதியில்லை
நாதியில்லை.
3).உறவின் பிரிவு என் உள்ளத்தை நொறுக்க
கலங்கி நானும் தவித்திட்ட போது (2)
சஞ்சலம் போக்கி தவிப்பினை மாற்றி
களிப்பைத் தந்திட யாருண்டு. (2)
நான் நம்பும் கன்மலை அது நீர் தானே நீர் தானே
நான் நம்பும் கோட்டையும் அது நீர் தானே நீர் தானே
அடைக்கலமாய் நீர் எனக்காய் வந்தீரே
… வந்தீரே
ஆதரவாய் நீர் என் துணையாய் நின்றீரே நின்றீரே
நீருண்டு இயேசைய்யா இவ்வுலகில்
உம்மைப் போல என்னை நேசித்திட (2)