வருகின்றார் இறைவன் – Varikintraar Iraivan
வருகின்றார் இறைவன் – Varikintraar Iraivan song lyrics
பல்லவி
வருகின்றார் – இறைவன் – வருகின்றார்
வான் புவி படைத்த வல்லவன் இறைவன்
வாழ்வதின் ஊற்றாம் விண்ணவன் இறைவன்
1. வரலாற்றின் அகரத்தையே வகுத்தவர் அவரே
வரலாற்றின் மானிடனாய் வந்தவர் அவரே
வரலாற்றின் போக்கை மாற்றிஅமைப்பவர் அவரே
வரலாற்றின் புதுமைதனை வடிப்பவர் அவரே
2. இல்லறத்தை நல்லறமாய் இணைப்பவர் அவரே
அல்லல் உறும் வேளை வந்து அணைப்பர் அவரே
எல்லையில்லா அமைதிதனை அளிப்பவர் அவரே
இல்லம் வரும் இளையனை ஏற்பவர் அவரே
3. உரிமையுடன் ஆட்கொள்ளும் உத்தமர் அவரே
பிரிவினையாம் சுவர்களையே தகர்ப்பவர் அவரே
நிறைவான ஒளி வாழ்வைத் தருபவர் அவரே
மறைவாக ஏழை உருவில் வருபவர் அவரே