வானில் பறந்து – Vaanil Paranthu christmas songs
வானில் பறந்து – Vaanil Paranthu christmas songs
ஆசைதான் | AASAITHAAN
LYRIC
வானில் பறந்து
பனிச் சாரலில் நனைந்து
இயேசுவில் மகிழ்ந்து
சங்கீதத்தில் மிதந்து
பணிந்து குனிந்து புகழ்ந்து துதித்து
CHRISTMAS பாட்டு பாட எனக்கு ஆசைதான்
பெத்லகேம் செல்ல ஆசைதான்
அந்த சத்திரம் காண ஆசைதான்
தொழுவம் பார்த்திட ஆசைதான்
அந்த முன்னனை நோக்கிட ஆசைதான்
அன்னையை பார்த்திட ஆசைதான்
ஆராரோ கேட்டிட ஆசைதான்- ஆசைதான்
நினைத்தாலே இனிக்குதே
மேய்ப்பரைக் காண ஆசைதான்
அவர் வாழ்த்துதல் கேட்க ஆசைதான்
புது வெள்ளி காண ஆசைதான்
அதன் அழகை இரசிக்க ஆசைதான்
அறிஞரைக் காண ஆசைதான்
அவர் படைத்ததைப் பார்த்திட ஆசைதான் -ஆசைதான்
நினைத்தாலே இனிக்குதே
பாலனைப் பார்த்திட ஆசைதான்
அவர் பக்கத்தில் சென்றிட ஆசைதான்
தொட்டு பார்த்திட ஆசைதான்
தாலாட்டு பாடிட ஆசைதான்
என்னையே படைத்திட ஆசைதான்
என் உள்ளத்தில் வைத்திட ஆசைதான் – ஆசைதான்
நினைத்தாலே இனிக்குதே